உள்நாட்டு செய்தி
வகுப்பில் மது விற்ற மாணவன் கைது…!
பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த போது,அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.அந்த பள்ளியில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு மது விற்றுள்ளார்.குறித்த மாணவன் இந்த மதுவை தண்ணீர் போத்தலில் கொண்டுவந்து பாடசாலையில் வைத்து,கோப்பையில் ஊற்றி உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.