உள்நாட்டு செய்தி
யாழில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் மீசாலைக்கும் – புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட தொடருந்து பாதையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மீசாலை வடக்கைச் சேர்ந்த 67 வயதான கி.நாகேஸ்வரி என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த பெண் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்