உள்நாட்டு செய்தி
புத்தகப் பைகளிலிருந்து,மீட்கப்பட்ட போதை கலந்த இன்ஹேலர்கள்*..!
குருநாகல் பகுதியில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், கொக்கரெல்ல பிரதேசத்தில் தொலைபேசிக்கான உபகரணங்களை விற்பனை நிலையத்தை நடத்தி வருபவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்கள் சிலரின் பாடசாலைப் புத்தகப்பையை,அந்த வகுப்பாசிரியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கைப்பற்றப்பட்டன. அதன்பின்னர் குறித்த ஆசிரியர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணைகளை தீவிரம்.