உள்நாட்டு செய்தி
கொழும்பில் வாள்வெட்டுத் தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு – களுபோவில சாரங்கர வீதியிலுள்ள வர்த்தக ஸ்தலமொன்றுக்கு முன்பாக வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை(21.09.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் விசாரணைகஜேந்திரன் எம்.பியை தாக்கியவர்களுக்கு பிணைமேலும், தனது மைத்துனரிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக பலமுறை பொலிஸில் முறைப்பாடு செய்தும், பொலிஸார் உண்மைகளை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காத காரணத்தினால் தனக்கு தொடர்ந்தும் இந்த அச்சுறுத்தல்கள் வருவதாக வர்த்தகர் தெரிவித்துள்ளார். ‘
‘தன்னைக் கொல்லும் நோக்கில் இந்தக் கும்பல் வந்துள்ளனர்” என தாக்குதலுக்கு உள்ளான முறைப்பாட்டாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.