உள்நாட்டு செய்தி
யாழில் போதைப்பொருளுடன் சந்தேகபர் கைது
யாழ். பேருந்து நிலையத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (07.09.2023) காலை குறித்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைஇதன்போது சந்தேகபரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.46 வயதுடைய சந்தேகநபர் , ஹெரோயினை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகபர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.