உள்நாட்டு செய்தி
கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்
இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு , விவசாய அமைச்சு, உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்து திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்தின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.