உள்நாட்டு செய்தி
கொக்கைன் போதைப்பொருளுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/01/1626692780-Court-rejects-bail-applications-of-two-arrested-over-child-sex-trafficking-case-B-1-1.jpg)
கொழும்பு – நாரஹேன்பிட்டியில் கொக்கைன் போதைப்பொருளுடன் வௌிநாட்டுப் பிரஜை உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வௌிநாட்டு பிரஜையிடமிருந்து 02 கிலோ 294 கிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸை சேர்ந்த 28 வயதான ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், பிலிப்பைன்ஸ் பிரஜையிடமிருந்து கொக்கைனை பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளதுடன், அவர் பயணித்த காரும் 07 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிருலப்பனையை சேர்ந்த 49 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டில் உள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரின் ஆலோசனைக்கு அமைவாக, குறித்த நபர் கொக்கைன் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பிரஜை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.