Connect with us

உள்நாட்டு செய்தி

போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயன்ற இருவர் கைது !

Published

on

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர்.கைதாகியுள்ள 43 மற்றும் 39 வயதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *