உள்நாட்டு செய்தி
குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் தொடர்பில் வனவிலங்கு அமைச்சு அறியவில்லை: பவித்ரா
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாது என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறான திட்டம் தொடர்பில் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.