உள்நாட்டு செய்தி
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டது..!
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (2) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர்,
சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.