உள்நாட்டு செய்தி
எச்சரிக்கை – இலங்கையில் மீ்ண்டும் நோய் பரவல்!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் 50 சதவீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,கண்டி,கேகாலை,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும்,டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகம் காணப்படுவதால் நோய் பரவும் வீதம் அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.