உள்நாட்டு செய்தி
ஏழு மாதங்களில் 65 மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்…!
ஓராண்டில் தர குறைபாடுகள் காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து ஒன்றும் உள்ளதாக அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
தரமான பிரச்சினை காரணமாக பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட மருந்துகளில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 6 மருந்துகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.