உள்நாட்டு செய்தி
கல்விஅமைச்சின் முக்கிய தீர்மானம்
2024 பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 கல்வியாண்டின் 2ம் தவணை ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி முடிவடையவுள்ளது. 2023ம் ஆண்டின் 3ம் தவணை 16ம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சர்ம சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் பரவலினால் பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து ஏற்பட்ட தாமதங்கனை சீர்செய்யும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தரம் ஐந்து புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பனவற்றை உரிய காலப்பகுதியில் நடத்தி முடிப்பது இந்தத் தவணை மாற்றத்தின் பிரதான நோக்கமாகும்.நிர்வாக நடவடிக்கைஇதேவேளை பாடசாலை அதிபர்களுக்கு நிதி அலுவலக நிர்வாக நடவடிக்கைகளை இலகுவான முறையில் மேற்கொள்வதற்கான அபிவிருத்தி அதிகாரிகளுடன் கூடிய புதிய சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.பாடசாலைகளுக்கு மின்சாரம், நீர்விநியோக கட்டணப் பட்டியல்களில் சலுகையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.