உள்நாட்டு செய்தி
தேங்காய் எண்ணெய் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி…!
இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்தின் காரணமாக தேங்காய் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் 700 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.