உள்நாட்டு செய்தி
பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத சடலம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.பேருந்து நிலையத்தினுள் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக பயணி ஒருவர் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த நபர் நேற்று (15) பிற்பகல் முதல் அப்பகுதியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.