உள்நாட்டு செய்தி
வவுணதீவு பொலிஸார் படுகொலை விவகாரம்!
வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (11.07.2023) மட்டக்களப்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.
எனினும் சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் நேற்று நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது