உள்நாட்டு செய்தி
லாஃப் எரிவாயு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (06.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 3,690 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 5 கிலோ கிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1476 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.