உள்நாட்டு செய்தி
குற்றச் செயல்களுடன் தொடர்டையவா் துப்பாக்கிச் சூட்டில் பலி
எம்பிலிபிட்டிய – பனாமுர – வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதற்கு பதல் அளிக்கும் விதமாக அதிகாாிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அவர் முன்னாள் ராணுவ சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவா் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்