உள்நாட்டு செய்தி
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளுடன் 2 சந்தேக நபர்கள் கைது
சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இன்றி இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளுடன் 2 சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய லொறியுடன் பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த மாடுகளில் ஆறு பசு மாடுகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.வெள்ளவாயில் இருந்து பதுளைக்கு லொறி மூலம் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாகவும், கிடைத்த இரகசிய தகவலின் பேரில், பதுளை, பதுலுபிட்டியவில் உள்ள மாடு வெட்டும் இடத்துக்கு நுழைந்த போது, கால்நடைகளுடன் லொறி கைது செய்யப்பட்டதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வெல்லவாய மற்றும் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 55 மற்றும் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பதுளை தலைமையக தலைமைப் பரிசோதகர் டி.எம். ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி திரு.பி.பி.அபேபால உள்ளிட்ட அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்த மாடுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்