Connect with us

Sports

டில்ஹார லொக்குஹெட்டிகே குற்றவாளி – ICC

Published

on

இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.

லொக்குஹெட்டிகே கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ICC யால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

அதன் பின்னர் தீர்ப்பாயத்தால் அவர் குறித்த வழக்கு இடம்பெற்று வந்தது.
அதற்கமைய அவருக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

அவருக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களை ஐ.சி.சி. முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் இலங்கை அணி சார்பில் 9 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இரண்டு T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்த இரு போட்டிகளிலும் அவர் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இறுதியாக அவர் இந்தியாவுக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடதக்கது.