Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைகிறது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்

Published

on

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் திறமையான மற்றும் பயனுள்ள திட்ட அமலாக்கத்திற்கான தரவு சேகரிப்பு ஆய்வறிக்கையை அதன் தலைவர் சனத் நிசாந்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டெட்சுயா யமடாவிடம் அண்மையில் கையளித்தார்.நாட்டில் 3.5 மில்லியன் (இலங்கை சனத்தொகையில் 15%) மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதுடன் துப்பரவேற்பாட்டு செயற்பாடுகளுக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடந்த 30 வருடங்களில் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி பங்களிப்புச் செய்துள்ளது.தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திட்ட அமுலாக்கத்தில், வளமான அனுபவங்களை பயன்படுத்தி, செயலாக்கத்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கூட்டிணைந்த கணக்கெடுப்பொன்றை நடாத்தியிருந்தது.இலங்கையில் நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு துறைகளின் அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய உதவிகளை சபையின் தலைவர் சனத் நிசாந்த பாராட்டினார்.இலத்திரனியல் ஆவண முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பல்வேறு செயற்பாடுகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவளிக்குமென நம்புவதாக சபையின் பொது முகாமையாளர் கலாநிதி வசந்தா இலங்கசிங்க தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *