உள்நாட்டு செய்தி
O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு
பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நேற்று (29) ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.