உள்நாட்டு செய்தி
களுத்துறையில் 16 வயதுடைய யுவதி ஒருவரின் சடலம் நிர்வாணமாக மீட்பு.
களுத்துறை, காலி வீதியில் உள்ள ஹோட்டலுக்குப் பின்னாலுள்ள ரயில் பாதைக்கு அருகில் 16 வயதுடைய யுவதி ஒருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்ட யுவதி மற்றொரு இளம் பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் சனிக்கிழமை (6) அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்ததாகவும் அந்தக் ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.பொலிஸ் விசாரணைகளின் படி ஹோட்டலுக்கு வந்து சில மணித்தியாலங்களில் ஒரு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இறந்த யுவதியுடன் இருந்த நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே குறித்த யுவதி நிர்வாணமான நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இறந்த யுவதியுடன் வந்த ஏனைய இளைஞனையும் பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த யுவதியுடன் சென்ற இளைஞனைக் தேடி கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்..இது கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.