உள்நாட்டு செய்தி
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.

பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஆல மரத்தில் கட்டியிருந்த குளவி கூடு இன்று (02) காலை கலைந்து கொட்டியதில் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூவர் மாணவர்கள், ஏனைய இருவரும் காப்பாற்றச் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் கிளங்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவி கூடுகள் பல கட்டப்பட்டிருக்கும் அந்த ஆலமரத்தை வெட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும். ஆலமரத்தை அறுத்தால் அது தெய்வ குற்றமாகிவிடும் என பலரும் அஞ்சுவதால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்டாமல் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.