உள்நாட்டு செய்தி
எலிக்காய்ச்சல் தீவிரம்..!
தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் கடுமையான நோயாக பரவி வருவதாக காலி மாவட்ட சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அசுத்தமான நீர், ஈரமான மண் அல்லது சேறு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் நபர்கள், எலிக்காய்ச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.