Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் உள்ள ஒரு குரங்குக்கு 50 ஆயிரம் ரூபா: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

Published

on

இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிடுகின்றார். சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர்,மேலும், குரங்குகளை பிடித்து, அதனை தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *