Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை ஒரு கண்கவர் இடம்

Published

on

2023 ஆம் ஆண்டில் உலகில் பயணிக்க சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை (Forbes) பட்டியலிட்டுள்ளது.

எம்மி விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான Juliana Broste இலங்கையை தேர்ந்தெடுத்ததாக Forbes கூறியுள்ளது. 

“நாட்டில் பணவீக்கம் இருந்தாலும் கூட, பார்வையாளர்கள் இலங்கையை ஒரு கண்கவர் இடமாகவும் மலிவு விலையில் நீண்ட தூரம் செல்லக்கூடிய இடமாகவும் காண்பார்கள். தீவைச் சுற்றிப் பாருங்கள், தலைநகர் கொழும்பின் சலசலப்பு முதல் அழகிய கடற்கரைகள், நெற்களஞ்சியங்கள், நீர்வீழ்ச்சிகள், சமவெளிகள், மலைகள் வரை அந்த நிலம் உங்களை ஏன் வியக்க வைக்கிறது என்பதை அறிவீர்கள்,” என  Juliana Broste குறிப்பிட்டுள்ளார். 

ஒரு புகைப்பட சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு பயணித்திருந்த Juliana Broste, ”ஒப்பீட்டளவில் குறுகிய தூரத்தில் பார்க்க நிறைய இருக்கிறது, எனவே உங்கள் கெமராவை தயாராக வைத்திருங்கள். இலங்கையில் வனவிலங்குகளைக் கண்டறிவது மிகவும் சிறப்பானது,” என்று கூறியுள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *