Connect with us

உள்நாட்டு செய்தி

உலக நீர் தின விழா

Published

on

உலக நீர் தின விழா எதிர்வரும் 22ஆம் திகதி (22.03.2023) புதன்கிழமை பி.ப. 2 மணிக்கு இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் (Centre of Excellence for Water and Sanitation – CEWaS) கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வில், யூ.என்.டி.பி. இலங்கை வதிவிட பிரதிநிதி அஷுசா குபோட்டா சிறப்புரையாற்றவுள்ளார்.உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.அத்துடன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும், கடந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3–ஏ சித்திபெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *