உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தலைமையில் “சதராவ தீபனீ” கௌரவிப்பு நிகழ்வு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.
கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார திரிமாதுர, சரத் கொத்தலாவல, உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
கலாநிதி பந்துல குணவர்தனவின் கலைத்துறை குறித்து, பேராசிரியர் பிரனீத் அபயசுந்தர, ரஞ்சித் குமார, அருண குணரத்ன, தினுஷ குடாகொடகே ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களால், தொகுக்கப்பட்ட “சுபந்து சினிமா வத” நூல் வெளியீடும் இந்நிகழ்வுக்கு இணையாக இடம்பெற்றது.