Connect with us

உள்நாட்டு செய்தி

பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானம்

Published

on

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பெட்ரோலியம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவையாளர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் நேற்றைய(15) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்தன.

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், தாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *