Uncategorized
கொவிட் உயரிழப்புகள் 273 ஆக உயர்வு

நாட்டில் நேற்று மூன்று கொவிட் மரணங்கள் பதிவான நிலையில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்
• அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்
• கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்
• மாளிகாவத்தை பகுதியில் வசித்த 70 வயதான பெண்
இதேவேளை, மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் நேற்று பதிவானதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.