உள்நாட்டு செய்தி
அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்!
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2004 இல் ஏற்பட்ட ஆழி பேரலை இவ்வாறான நேரத்தில் ஏற்ப்பட்டதோடு தற்போது ஏற்பட்டு வரும் நில அதிர்வூகளின் வேக எண்ணிக்கை நாளுக்கு நாள் உறைவடைவதையும் அவதானிக்க கூடியதாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.