அரசியல்
பாரளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷா டி சில்வாவின் பெயர் முன்மொழிவு
நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷா டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது கட்சித் தலைவர்களிடம் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்
அனைத்து எதிர்க்கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஒப்புதலுக்கு அமையவே நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் நியமிக்கப்பகின்றார்
நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவியை கடந்தவாரம் ராஜினாமா செய்தார்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர், நிதிக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மயந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்
இந்த நிலையிலேயே நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷா டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.