உள்நாட்டு செய்தி
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இம்மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒப்பிடுகையில், இது சுமார் 15 சதவீத வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில் ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா , ஜெர்மனி, மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஸ்யாவில் இருந்தே அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு லட்சத்து ஆயிரத்து 36 சுற்றுலாப்பயணிகள் விமானம் மூலமும் ஆயிரத்து 309 சுற்றுலாப்பயணிகள் கப்பல் மூலமும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவிலிருந்து 24 ஆயிரத்து 527 சுற்றுலாப்பயணிகளும் இந்தியாவிலிருந்து 13 ஆயிரத்து 468 சுற்றுலாப்பயணிகளும் ஜேர்மனியிலிருந்து 8 ஆயிரத்து 9 பேரும் பிரான்சிலிருந்து 4 ஆயிரத்து 579 பேரும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதார சூழ்நிலையினால் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளது எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் கணிசமான அளவு குறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.