Connect with us

உள்நாட்டு செய்தி

மற்றுமொரு ஜப்பான் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்

Published

on

 நாட்டின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இலங்கையிலுள்ள தனது அலுவலகத்தை மூடுவதற்கு  ஜப்பானிய Taisei நிறுவனமும் தீர்மானித்து உள்ளது.

அதன் முதல் கட்டமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தனது ஒப்பந்தங்களை ரத்து செய்ய Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளதாக Nikkei Asia இணையத்தளம் ஆதாரங்களை மேற்கோள்காட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நான்கு மாடி பயணிகள் முனைய கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பணிகளுக்காக 2020 ஆம் ஆண்டில் ஜப்பானிய Taisei இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு 62 பில்லியன் யென் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக Nikkei Asia இணையதளம் தெரிவித்துள்ளது.

 இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்த நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய இயக்குனரான விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடன் வழங்குவதை நிறுத்தியதன் காரணமாக இந்தத் திட்டம் முடங்கியது.

 இதனால், திட்டத்தில் இருந்து விலக விமான நிலைய செயற்படுத்தல் அதிகாரிகளுடன் Taisei இன்ஜினியரிங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திட்டத்தை கைவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் Nikkei Asia இணையதளம் தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தை நஷ்டம் தரும் திட்டம் என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *