உள்நாட்டு செய்தி
புற்றுநோய் மருந்து விற்பனை தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைக்கப் பெற்ற புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தவுக்கு அறிவித்துள்ளார்.அறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் பொறுப்பானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவு மற்றும் அவசரகால சோதனைப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்மேலும், சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கையை ஒரு நாளுக்குள் சமர்ப்பிக்குமாறு அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.அமைச்சர் ரம்புக்வெல்ல, இவ்வாறான சம்பவங்களை அவசரமாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நபர்களின் தரம் மற்றும் வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
Continue Reading