உள்நாட்டு செய்தி
கொக்கட்டிச்சோலை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்தில் தோணில் சென்று மீன்பிடிக்க முயன்றபோது தோணி கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
களூவுந்தன்வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியரான யோகராசா கிபேதன், 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
களூவுந்தன்வெளி அரச தமழ் கலவன் பாடசாலையில் கா.போ.த.சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவர்களும் ஆசியரியருமாக 8 பேர் சம்பவதினமான இன்று காலை ஒன்றிணைந்து தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.
சுற்றுலா சென்ற இவர்கள் அந்த பகுதியிலுள்ள சிறிய குளமான 40 வட்டை குளத்தில் மீன்பிடிப்பதற்காக அங்கிருந்த தோணி ஒன்றில் ஆசிரியருடன் 3 மாணவர்களும் தோணில் சென்ற நிலையில் தோணி குளத்தில் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கி 4 பேரும் காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து நீரிழ் மூழ்கி காணாமல் போனவர்களை அந்தபகுதி மக்கள் தேடிய நிலையில் உயிரிழந்த நிலையில் ஆசிரியர் உட்பட 4 பேரை சடலமாக மீட்கப்பட்டு அரசடித்தீவு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.