Connect with us

உள்நாட்டு செய்தி

ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர

Published

on

ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (05) இரவு ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நவம் பெரஹரா விழாவை வருடந்தோறும் நடத்துவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்த ஜனாதிபதி, இக்கட்டான காலத்தை கடந்து செல்வதற்கு இது பெரும் ஆசிர்வாதமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்