Connect with us

உலகம்

துருக்கி-சிரியா எல்லையில்- சக்திவாய்ந்த நிலநடுக்கம் (update)

Published

on

துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது.

மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது.

காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 3.20 க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இது பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது.

இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசியன்டெப் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

துருக்கியை தொடர்ந்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தது. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 53 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.