உள்நாட்டு செய்தி
விக்டோரியா நூலண்ட் இலங்கை வந்தடைந்தார்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள விக்டோரியா நூலண்ட், அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.
மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை விக்டோரியா நூலண்ட் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.