உள்நாட்டு செய்தி
இரா. சம்பந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
நேற்றிரவு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்