உள்நாட்டு செய்தி
தடம் புரண்ட ரயில் – ரயில் சேவையில் தாமதம்!
தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தடம் புரண்ட ரயில் தெற்கு களுத்துறையில் இருந்து கொழும்பு மருதானை நோக்கி பயணிக்கும் சரக்கு ரயிலாகும்.ரயில் இயந்திரத்தை மாற்றுவதற்காக மருதானை நோக்கி சென்று கொண்டிருந்த போது தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் தடம் புரண்டது.
இதனால் காலியில் இருந்து வரும் புகையிரதங்களும் தெற்கு களுத்துறை நிலையத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.