Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு டொலர் வழங்கல் மத்திய வங்கியால் இடைநிறுத்தம்

Published

on

எரிபொருளைக் கொண்டு வருவதற்காக எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்கு டொலர்களை வழங்குவதை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான டொலர்களை ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்குவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளது.

வங்கிகளிடம் தற்போது போதுமான அந்நியச் செலாவணி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியத் தேவைக்காக வங்கி முறையின் ஊடாக டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் மாத்திரம் மத்திய வங்கி சார்பில் தலையிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *