உள்நாட்டு செய்தி
ஓய்வூதியம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!
ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவை நேற்று முதல் உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன் திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு மாதாந்தம் 2,600 கோடி ரூபா செலவாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.