உள்நாட்டு செய்தி
ரயில்வே திணைக்களம் விசேட அறிக்கை!
இன்று (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.