உள்நாட்டு செய்தி
2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டி பகுதியில் இருவர் கைது
2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டி பகுதியில் இருவர் கைதுபுத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.02 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 02 கிலோகிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கற்பிட்டி பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்குட்படுத்திய போதே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன்போது கற்பிட்டி – துரையடி மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்னர்.இவர்கள் போதைப்பொருளை கொழும்பிற்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.