உள்நாட்டு செய்தி
சுகாதார அமைச்சர் பதவி இராஜினாமா?
ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனமொன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டது ஒப்புவிக்கப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் வசதிகளின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது அமைச்சரவையின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கடன் வசதியின் கீழ் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான எழுத்து மூலமான அனைத்து ஆதாரங்களும் எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.