உள்நாட்டு செய்தி
நாடுபாரிய மின்வெட்டு எதிர்நோக்கும்- ஜனக ரத்நாயக்க
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி கையிருப்புகளும் தீர்ந்துவிடும் எனவும் அதற்கு முன்னர் நிலக்கரி கப்பல் வரவில்லையென்றால் பாரிய மின்வெட்டு ஏற்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலக்கரி மின் ஆலையை முழுமையாக இயக்குவதற்கு நாளொன்றுக்கு ஏழாயிரத்து ஐநூறு மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். ஆலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இயக்கப்படுவதால், தற்போதுள்ள நிலக்கரி இருப்பு ஜனவரி 2ம் தேதி தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறினார். அடுத்த கப்பல் நுரைச்சோலைக்கு வந்தாலும், நிலக்கரியை இறக்குவதற்கு சுமார் ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், ஜனவரி இரண்டாம் திகதி முதல் நிலக்கரி இறக்கப்படும் நாள் வரை ஆலை முற்றிலும் செயல்படாமல் இருக்கும் என்றார்.