உள்நாட்டு செய்தி
மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
அம்பாறை மஹாஓயா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 மாணவிகள் 6 பேரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
54 வயதுடைய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், எனினும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் சாட்சியங்களை பதிவு செய்த பொலிஸார் சந்தேகத்திற்குரிய ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.