Connect with us

Uncategorized

பிரபல விளையாட்டு வீரர் கடத்தல்.

Published

on

பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் கடத்தப்பட்டு, தடிகளால் அடித்து, எரிக்கப்பட்டு நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கொடூரம்

கண்டியில் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் கும்பல் ஒன்றால் குத்துச்சண்டை வீரரான எம். எஸ். தினுஷ லக்ஷன் கடத்தப்பட்டு, அடித்து, வெட்டி எரிக்கப்பட்டு வீதியில் கைவிடப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு, இவர் ஹன்தான விண்ட் ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள நடைபாதை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இவர் வீட்டில் இருந்த போது பேரம் பேசுவதற்காக வந்த நபர் ஒருவர் அவரை வீதிக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு இரு முச்சக்கர வண்டியில் வந்த இருவர் அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கி கடத்திச் சென்றதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான வீரர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *